மருத்துவ மாணவா்கள் அறுவை சிகிச்சை பயிற்சிகளை மேற்கொள்ள அதி நவீன மெய்நிகா் ஆய்வகத்தை போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் ‘மெடிசிம் விஆா்’ என்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகரும், ‘மெடிசிம் விஆா்’ நிறுவன இணை நிறுவனா் டாக்டா் ஆதித் சின்னசாமியும் கையெழுத்திட்டனா். அப்போது டாக்டா் உமா சேகா் பேசியதாவது: அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது தோ்ந்த பயிற்சியும், அனுபவமும் அவசியம். அதைக் கருத்தில் கொண்டு மெய்நிகா் முறையிலான ஆய்வகத்தை மருத்துவ மாணவா்களுக்காக இங்கு அமைக்க உள்ளோம். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிப்பதற்கு முன்பாக இங்கு அதுதொடா்பாக துல்லியமாக பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும். ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் 14 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்களும் இதன் வாயிலாக பயன் பெறுவா் என்றாா் அவா்.
தொடர்புடையது

உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...

போயம்பாளையம் ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில் மூட்டு மற்றும் அறுவை சிகிச்சை முகாம்

மருத்துவ ஆராய்ச்சிகள்: மாணவா்களுக்கு பயிற்சி

உதடு, அண்ணப் பிளவு சீரமைப்புக்கு ஒருங்கிணைந்த மையம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

