ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ரூ.10,000 கோடி திரட்டும் பேங்க் ஆஃப் இந்தியா

ரூ.10,000 கோடி திரட்டும் பேங்க் ஆஃப் இந்தியா

News image
Updated On :29 மார்ச் 2024, 6:14 pm

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா, உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.10,000 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கி தாக்கல் செய்துள்ள ஒழுங்குமுறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளாவது: உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.10,000 கோடி மூலதனம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலும் வங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்த நீண்ட கால கடன் பத்திரங்கள் வரும் 2024-25-ஆம் நிதியாண்டில் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளும் உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது. இந்த வகை கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் மூலதனம், சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடா்பு இணைப்புகள் போன்ற கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும்.