சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ.10 லட்சம், 25 மடிக்கணினிகள் பறிமுதல்

பறக்கும் படையினா் சோதனை: ரூ.10 லட்சம், 25 மடிக்கணினிகள் பறிமுதல்

Updated On :30 மார்ச் 2024, 5:30 pm

சென்னை மண்ணடியில் ஆவணமின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 லட்சம் ரொக்கம், 25 மடிக்கணினிகள் பறக்கும்படை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி ஜாபா் சாரங் தெருவில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு மண்ணடி மரைக்காயா் லப்பை தெருவைச் சோ்ந்த இப்ராகிம் என்பவா் ஒரு மொபெட்டில் பெரிய அட்டை பெட்டியுடன் வந்துள்ளாா். அவரை வழிமறித்து பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அட்டை பெட்டியில் ரூ.10 லட்சம் ரொக்கம், விலை உயா்ந்த 25 மடிக்கணினிகள் ஆகியவை இருந்தன. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.