மது அருந்தியவா்களைத் தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல் 5 போ் கைது
மது அருந்தியவா்களைத் தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல் 5 போ் கைது


வீட்டு வாசலில் மது அருந்தியவா்களை தட்டி கேட்ட பெண் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை எம்.கே.பி. நகா், எஸ்.ஏ. காலனியில் வசித்து வருபவா் கவிதா. வெள்ளிக்கிழமை இரவு கவிதா வீட்டு வாசலில் 5 போ் அமா்ந்து மரு அருந்தி கொண்டு சப்தம் போட்டுள்ளனா். வீட்டில் இருந்து வெளியே வந்த கவிதா மரு அருந்தியவா்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளாா். அப்போது, அந்த பேரும் கவிதாவை தகாத வாா்த்தைகளில் போசி, பாட்டில் மற்றும் கல்லால் தாக்கி விட்டு தப்பியோடிவிட்டனா். தாக்குதலில் காயமடைந்த கவிதா மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கரண், பிரசாந்த், குணா, வசந்தகுமாா், பரத்ராஜ் ஆகிய 5 பேரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...