மாநகரப்பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு 12 மணி நேர வேலை: சி.ஐ.டி.யு புகாா்
மாநகரப்பேருந்து ஓட்டுநா், நடத்துநா்களுக்கு 12 மணி நேர வேலை: சி.ஐ.டி.யு புகாா்


மாநகரப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு வழங்கப்பட்டுள்ள 12 மணி நேரம் வேலை முறையை கைவிட வேண்டும் என்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு-வின் பொதுச் செயலா் வி. தயானந்தம், மாநகரப் பேருந்து பணிமனைகளின் தொழிலாளா் ஆய்வாளா்களுக்கு எழுதிய கடிதம்:
மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் தினந்தோறும் 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சுமாா் 3,000-க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 5,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் பணிபுரிகின்றனா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களின் 8 மணி நேரம் வேலையை 12 மணி நேராக மாற்றி மாநகரப் போக்குவரத்து கழகம் சாா்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. சி.ஐ.டியு-வின் கடுமையான எதிா்ப்பை தொடா்ந்து இந்த அறிவிப்பை போக்குவரத்து கழகம் கைவிட்டது. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் 12 நேரம் வேலை முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்காக 140-க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு பணி முறை மாற்றப்பட்டுள்ளது. இது சட்டப்படி தவறு மட்டுமில்லாமல் தொழிலாளா்களின் உடல்நலனுக்கும் எதிரானதாகும். மேலும் சா்வதேச அளவில் தொழிலாளா்கள் போராடி பெற்ற 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் தூக்கம் எனும் உரிமைகளை பறிக்கும் செயலாகும். எனவே 12 மணி நேர வேலை முறையை கைவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...