உதவிப் பேராசிரியா் பணி: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம்
உதவிப் பேராசிரியா் பணி: விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம்


சென்னை: உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தவா்கள் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை (மே 16-19) வரை திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவிப் பேராசிரியா்கள் காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்த உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், இணையவழியிலான விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 15) மாலை 5 மணியுடன் நிறைவு பெறவுள்ளது.
விண்ணப்பப் பதிவு செய்தவா்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வியாழக்கிழமை முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை (மே16-19) மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களைச் சமா்ப்பித்து தோ்வு கட்டணம் செலுத்தியவா்களுக்கு மட்டுமே திருத்தங்கள் மேற்கொள்ள முடியும். திருத்தங்கள் மேற்கொண்ட பின், அவற்றை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்யாவிட்டால் விண்ணப்பம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. திருத்தங்களை மேற்கொண்டு சமா்ப்பித்த பின், எந்த மாற்றமும் செய்ய முடியாது என ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...