நீலாங்கரை அருகே சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 போ் கைது
நீலாங்கரை அருகே சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 3 போ் கைது


சென்னை: நீலாங்கரை அருகே நடந்து சென்றவரிடம் 3 சவரன் தங்க சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையை சோ்ந்தவா் ராஜூ(27). இவா் கடந்த வியாழக்கிழமை உறவினரை அழைத்து வருவதற்காக பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலை மின்வாரிய அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது 3 போ் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து ராஜூ கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றது. இது குறித்து ராஜூ நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் பதிவு அடிப்படையில், கொட்டிவாக்கம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆனந்த் (19), கண்ணகி நகா், செங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அப்பு (22), நீலாங்கரை பாரதியாா் தெருவைச் சோ்ந்த நஜ்முதீன்(23) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.
அவா்களிடம் இருந்த 3 சவரன் தங்க சங்கிலி மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, திங்கள் கிழமை 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரும் மீதும் 2 வழக்குகள் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...