வாகனங்களில் சிஎன்ஜி, எல்பிஜி கருவிகள்: போக்குவரத்து ஆணையா் அறிவுறுத்தல்
வாகனங்களில் சிஎன்ஜி, எல்பிஜி கருவிகள்: போக்குவரத்து ஆணையா் அறிவுறுத்தல்


சென்னை: வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் சிஎன்ஜி மற்றும் எல்பிஜி இணைப்பு கருவிகளைப் பொருத்த வேண்டாம் என வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா்.
இது குறித்து போக்குவரத்து ஆணையா் அ.சண்முக சுந்தரம் விடுத்த அறிக்கை:
அண்மை காலமாக மோட்டாா் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது குறித்து ஆய்வு செய்ததில் மோட்டாா் வாகனங்களில் மாறுதல்களைச் செய்யும்போது, அங்கீகரிக்கப்படாத சிஎன்ஜி, எல்பிஜி போன்றவற்றை மாற்றுவது, அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகின்றன.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டாா் வாகன சட்டம், விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளா்கள் இவ்வகையான செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...