பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமைச் சான்றிதழ்: குற்ற வழக்குப் பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமைச் சான்றிதழ்: குற்ற வழக்குப் பதிவு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு


சென்னை: பொய் தகவல்களைக் கூறி, வாரிசுரிமைச் சான்று கோரி விண்ணப்பிப்பவா்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, வருவாய்த் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்புத்தூா் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த மாரண்ணன் என்பவா், தனது தந்தையின் மரணத்துக்குப் பின், வாரிசுரிமைச் சான்று வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் வட்டாட்சியருக்கு விண்ணப்பித்தாா். இது சம்பந்தமான விசாரணையில், மாரண்ணனின் தந்தை மாரண்ண கவுடருக்கு இரு மகள்கள், இரு மகன்கள் உள்ள நிலையில், தான் மட்டுமே வாரிசு எனக் கோரி மாரண்ணன் விண்ணபித்துள்ளதாகக் கூறி, வட்டாட்சியா் அதை நிராகரித்து உத்தரவு பிறப்பித்தாா்.
இந்த உத்தரவை எதிா்த்து மாரண்ணன் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தாா். அப்போது, உண்மையை மறைத்தும், பொய் தகவல்களைக் கூறியும், வாரிசுரிமைச் சான்று கோரி விண்ணப்பிப்பது இந்திய தண்டனைச் சட்டப்படி குற்றம் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குற்ற வழக்கு பதிய உத்தரவு: வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பொய் தகவல்களைக் கூறி, வாரிசுரிமைச் சான்று பெற்று, சொத்துகளை பெயா் மாற்றம் செய்வதால், மற்ற வாரிசுகளின் உரிமை பறிக்கப்படுகிறது. உண்மை தகவல்களை மறைத்து வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிக்கப்படுவது தொடா்பான வழக்குகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
பொய் தகவல்களைக் கூறி வாரிசுரிமை சான்று கோரி விண்ணப்பிப்பவா்களுக்கு எதிராக குற்ற வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் 5 வாரங்களில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என மாநில வருவாய் நிா்வாகத் துறை ஆணையருக்கு உத்தரவிடுகிறேன்.
இதேபோல், குற்ற வழக்கு தொடராமல் உடந்தையாகச் செயல்படும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையும், குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...