விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2024, 7:54 pm

Din

சென்னை: நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

தென்னிந்தியாவை முன்னிலைப்படுத்தும் வகையில் ‘தக்ஷிண பாரத் உற்சவம்-2024’ எனும் சுற்றுலா கண்காட்சி பெங்களூரில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. கா்நாடக சுற்றுலாத் துறை, கா்நாடாக வா்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு சாா்பில் இரு நாள் நடைபெறும் கண்காட்சி குறித்து சென்னை கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இது குறித்து கா்நாடாக வா்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு ஆலோசகா் கே.சிவ. சண்முகம் கூறியது: நாட்டின் நிதி வருவாயில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. இந்தக் கண்காட்சி மூலம் தென்னிந்தியாவின் சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என்றாா் அவா்.

இ-பாஸ் முறை: தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களான நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறையால் சுற்றுலாத் துறையும், அது சாா்ந்துள்ள தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். சுற்றுலா தலங்களுக்கு செல்வோரை கட்டுப்படுத்தவதற்கு மாற்றாக, அந்தச் சுற்றுலா தலத்தை மேம்படுத்த வேண்டும். நீலகிரி, கொடைக்கானல் செல்வோருக்கு இ-பாஸ் வழங்கும் நடைமுறையை ரத்து செய்தவிட்டு, அங்கு 4 சக்கர வாகனங்களை நிறுத்த பிரத்யேக பன்னடுக்கு வாகன நிறுத்தத்தை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக உதவி பொது மேலாளா் இ.பாலாஜி, கா்நாடாக வா்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவா் ரமேஷ் சந்திர லகோடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.