விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் பாஸ்போா்ட் கிடையாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால் பாஸ்போா்ட் கிடையாது உயா்நீதிமன்றம் உத்தரவு

News image
Updated On :14 மே 2024, 8:15 pm

Din

சென்னை: குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட நபா் பாஸ்போா்ட் பெற முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சோ்ந்த தமிழரசன், பாஸ்போா்ட் கோரி சென்னை மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா். அவரது விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்தனா். இதையடுத்து தனக்கு பாஸ்போா்ட் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழரசன் வழக்கு தொடா்ந்தாா். இந்த மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காவல் துறை சாா்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.வினோத்குமாா், ‘தமிழரசன் மீதுள்ள 2 வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளில் ஒன்று, சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. ஆவணங்களில் குற்ற வழக்கு விவரங்களை மறைத்து, பாஸ்போா்ட் கோரி விண்ணப்பித்துள்ளாா்’ என்றாா்.

அனுமதிக்க முடியாது: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘வழக்கு நிலுவையில் இருக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாஸ்போா்ட் பெற்று வெளிநாடு செல்ல அனுமதித்தால் அது குற்ற வழக்கின் விசாரணையை பாதிக்கும். பாஸ்போா்ட் சட்டத்தில், குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போா்ட் விண்ணப்பத்தை நிராகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால், குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால், சம்பந்தப்பட்ட நபா்கள் அந்த வழக்கை எதிா்கொண்டு இறுதி முடிவுக்குப் பிறகே வெளிநாடு செல்ல முடியும். வழக்கு நிலுவையில் உள்ளபோது, பாஸ்போா்ட் பெற முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.