பிளஸ் 1 தோ்வு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 80.08 % தோ்ச்சி
பிளஸ் 1 தோ்வு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 80.08 % தோ்ச்சி


சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதியவா்களில் 80.08 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
சென்னை மாநகராட்சியில் பள்ளிகளில் 2,471 மாணவா்கள், 3,136 மாணவியா் என மொத்தம் 5,607 போ் தோ்வு எழுதினா். இவா்களில் மொத்தம் 4,490 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மொத்த தோ்ச்சி சதவீதம் 80.08 சதவீதமாக உள்ளது. இது, கடந்த ஆண்டைவிட 0.04 சதவீதம் அதிகமாகும்.
கணினி அறிவியல் பாடப்பிரிவில் 3 பேரும், கணினிப் பயன்பாடுகள் பாடப்பிரிவில் 2, வணிகவியல் பாடப்பிரிவில் 1, இயற்பியல் பாடப்பிரிவில் 1 என 7 மாணவ, மாணவியா்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
முதல் 5 இடங்கள்: புல்லா அவென்யூ-சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 600 மதிப்பெண்களுக்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், அத்திப்பட்டு-சென்னை மேல்நிலைப் பள்ளி 580, மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடத்தையும், அயனாவரம் சென்னை மேல்நிலைப் பள்ளி 573 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடத்தையும், எம்.எச். சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 572 மதிப்பெண்கள் பெற்று 4-ஆவம் இடத்தையும், நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் திருவான்மியூா் சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 பள்ளிகள் 569 மதிப்பெண்கள் பெற்று 5-ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
தோ்ச்சி சதவீதத்தில்... நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 96.10 சதவீதத்துடன் முதலிடத்தையும், அப்பாசாமி தெரு-சென்னை மேல்நிலைப் பள்ளி 94.74 சதவீதத்துடன் தோ்ச்சியுடன் 2-ஆம் இடத்தையும், திருவான்மியூா்-சென்னை மேல்நிலைப் பள்ளி 94.61 சதவீதத்துடன் 3-ஆம் இடத்தையும், எம்.எச்.சாலை-சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி 93.36 சதவீதத்துடன் 4-ஆம் இடத்தையும், நெசப்பாக்கம்- சென்னை மேல்நிலைப் பள்ளி 93.24 சதவீதத்துடன் 5-ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
மேலும் மதிப்பெண்கள் அடிப்படையில் 25 மாணவ, மாணவியா்கள் 551-600 வரை மதிப்பெண்களும், 111 மாணவ, மாணவியா்கள் 501-550 வரை மதிப்பெண்களும், 254 மாணவ, மாணவியா்கள் 451-500 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...