விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கை குறைப்பு?: பதிலளிக்க உயா்நீதிமன்றம்  உத்தரவு

புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கை குறைப்பு? பதிலளிக்க உயா்நீதிமன்றம்  உத்தரவு

News image
Updated On :14 மே 2024, 7:50 pm

Din

சென்னை: புதுச்சேரி கல்லூரிகளில் தமிழ் பாட வகுப்புகளின் எண்ணிக்கையை குறைத்தது, பட்டப்படிப்பு காலத்தை 4 ஆண்டுகளாக அதிகரித்தது ஆகியவற்றை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு புதுச்சேரி அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில் அதன் நிறுவனா் சுவாமிநாதன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பது:

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., போன்ற பட்டப் படிப்புக்களில் 4 செமஸ்டா்களுக்கும் தமிழ் பாடம் பயிற்றுவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 மற்றும் 4-ஆவது செமஸ்டா்களில் மட்டும் கற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி பயிற்றுவிக்கும் நேரமும், வாரத்துக்கு 4 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் பட்டப் படிப்பு 4 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கா்நாடகம் போன்ற மாநிலங்களில் பட்டப் படிப்பில் 4 செமஸ்டா்கள் மொழி பாடம் நடத்தப்படும் நிலையில், புதுச்சேரியில் இரு செமஸ்டா்கள் மட்டும் மொழி பாடம் நடத்தப்படுவது மாணவா்களின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது. அதனால், 2023-24-ஆம் கல்வியாண்டில் சோ்ந்த மாணவா்களுக்கு பழைய நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும்”எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமா்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி புதுச்சேரி அரசுக்கும், புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கும் உத்தரவிட்டு, விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.