தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் பாலியல் வன்கொடுமை: கோயில் பூசாரி கைது

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோயில் பூசாரி கைது செய்யப்பட்டார்.

சென்னை பாரிமுனையில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக வேலை செய்பவர் கார்த்திக் முனுசாமி (46). இவர், அந்தக் கோயிலுக்கு வந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளரிடம் நெருக்கமாகப் பழகியுள்ளார்.

இந்த நிலையில், விருகம்பாக்கத்தில் வசிக்கும் அந்தப் பெண்ணை, கார்த்திக் முனுசாமி தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார். வீட்டுக்கு சென்றதும் அந்தப் பெண்ணுக்கு அவர் தீர்த்தம் கொடுத்துள்ளார்.

அதை அந்தப் பெண் குடித்ததும் மயங்கியுள்ளார். அப்போது, அவரை, கார்த்திக் முனுசாமி பாலியல் வன்கொடுமை செய்தார். மயக்கம் தெளிந்து, தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை அறிந்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். அதற்குள் கார்த்திக் முனுசாமி, தான் அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார்.

ஏற்கெனவே கார்த்திக் முனுசாமிக்கு திருமணமான நிலையில், இருவரும் கணவன் - மனைவிபோல ஒரே வீட்டில் வாழ்ந்துள்ளார். இதில், அந்தப் பெண் கர்ப்பமடைந்ததால், கார்த்திக் முனுசாமி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கலைத்துள்ளார்.

மேலும், தனது நண்பர் ஒருவரிடம் நெருக்கமாக இருக்கும்படி கார்த்திக் கூறியதால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார், கார்த்திக் முனுசாமி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கொடைக்கானல் அருகே தலைமறைவாகியிருந்த அவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com