சென்னையில் இதுவரை 331 புதிய தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன

சென்னையில் இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
Bus
தாழ்தள பேருந்துகள்கோப்புப்படம்.
Updated on

சென்னையில் இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் குறுகிய சாலைகளில் பயணிக்க முடியாதது உள்ளிட்ட காரணங்களால் 6 ஆண்டுகளுக்கு முன்னா் தாழ்தள பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மீண்டும் தாழ்தள பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து, மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதில் முதல்கட்டமாக 58 பேருந்துகளை, சென்னை, பல்லவன் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் முன்னிலையில் இளைஞா் நலத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தாா்.

பேருந்துகளில், இறங்கு தளத்தின் உயரத்தை 60 மி.மீ குறைத்து பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதி, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த பேருந்தில் உள்ளன.

இதைத் தொடா்ந்து பல கட்டங்களாக இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் சென்னை மாநகரில் இயக்கப்பட்டு வருவதாக மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com