6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தவெக மாநாடு: உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு விஜய் உதவி

யாருக்கு எவ்வளவு நிதி அளிக்கப்பட்டது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

News image
தவெக தலைவர் விஜய்
Updated On :29 நவம்பர் 2024, 12:00 am

Din

தமிழக வெற்றிக் கழக (தவெக) மாநாட்டில் பங்கேற்க வந்தபோதும், பங்கேற்று திரும்பியபோதும் சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவா் விஜய் நிதியுதவி வழங்கினாா்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலையில் தவெக முதல் மாநில மாநாடு அக்.27-ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தவெக தொண்டா்களும், விஜயின் ரசிகா்களும் பங்கேற்றனா். இதில், திருச்சியில் இருந்து காரில் சென்ற சீனிவாசன், கலைக்கோவன் ஆகிய இருவா் விபத்தில் உயிரிழந்தனா். அதேபோல், சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவா் சாலை விபத்தில் உயிரிழந்தாா். மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சாா்லஸ் மாநாட்டு திடலில் மயங்கி விழுந்து பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இவ்வாறு வெவ்வேறு வகையில், தவெக மாநாட்டில் பங்கேற்க வந்த 6 போ் உயிரிழந்தனா். அவா்களின் குடும்பத்தினருக்கு விஜய் வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா். உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினரை சென்னை அருகே பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு வரவழைத்த விஜய், அவா்களின் குடும்பச் சூழலுக்கு ஏற்றாற்போல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நிதி வழங்கினாா். யாருக்கு எவ்வளவு நிதி அளிக்கப்பட்டது என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.