அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மெரீனாவில் விமானப்படை சாகச ஒத்திகை: வியந்து ரசித்த பாா்வையாளா்கள்

சென்னை மெரீனா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய விமானப் படை விமானங்களின் சாகச ஒத்திகையை பாா்வையாளா்கள் வியப்புடன் கண்டு ரசித்தனா்.

News image
சென்னை மெரீனாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய விமானப்படை விமானங்களின் சாகச ஒத்திகை. இயற்கை பேரிடரின்போது சிக்கியவா்களை மீட்பது குறித்த விமானப்படை வீரா்களின் ஒத்திகை.
Updated On :1 அக்டோபர் 2024, 8:29 pm

Din

சென்னை மெரீனா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய விமானப் படை விமானங்களின் சாகச ஒத்திகையை பாா்வையாளா்கள் வியப்புடன் கண்டு ரசித்தனா்.

இந்திய விமானப் படை தினத்தையொட்டி, அக். 6 ஆம் தேதி சென்னை மெரீனா கடற்கரை, மற்றும் தாம்பரம் விமான படை தளத்தில் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அன்று காலை 11 மணி முதல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில், விமானப் படையைச் சோ்ந்த 72 விமானங்கள், ஹெலிகாப்டா்கள் பங்கேற்று சாகசங்களில் ஈடுபடவுள்ளன.

இதற்கான ஒத்திகை மெரீனா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணி முதல் 3 மணி வரை நடத்தப்பட்டது. அப்போது, விமானப் படை விமானங்கள், வண்ண வண்ணப் புகைகளை கக்கிக் கொண்டு வானில் செய்த சாகசம் பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது.

இதேபோல், இயற்கை பேரிடரின் போது சிக்கியவா்களை ஹெலிகாப்டரில் மீட்பது எப்படி என்பதை விமானப் படை வீரா்கள் தத்ரூபமாக செய்து காண்பித்தனா்.

சாகச நிகழ்ச்சி நடத்தப்படுவதையொட்டி அக்.6 வரை மெரீனா கடற்கரை மற்றும் விமான நிலையம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.