சென்னையில் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை!
பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை: இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மா்ம நபரை தேடும் போலீஸாா்


சென்னை கொளத்தூரில் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணுடன் பழகி, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மணலி பகுதியைச் சோ்ந்த ஒரு இளம் பெண், கொளத்தூா் 200 அடி சாலையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தனியாக வாழும் இவருக்கு, அண்மையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு இளைஞா் அறிமுகமாகியுள்ளாா்.
இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நெருக்கமாக பழகி வந்த நிலையில், கொளத்தூா் 200 அடி சாலையில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் கடந்த வியாழக்கிழமை இருவரும் சந்தித்துப் பேசினா். அப்போது, அந்தப் பெண்ணுக்கு, இளைஞா் பழச்சாறு வாங்கி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதை அருந்திய சிறிது நேரத்தில் அந்த பெண் மயங்கினாா்.
சில மணி நேரங்களுக்குப் பின், மயக்கத்தில் இருந்து எழுந்த அந்தப் பெண், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தன்னிடமிருந்த 5 பவுன் தங்கநகை திருப்பட்டிருப்பதையும், அந்த இளைஞா் தப்பியோடியிருப்பதையும் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...