புதுமையான திட்டங்களை செயல்படுத்துவோம்! - துணை முதல்வா் உதயநிதி


தமிழகத்தில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று துணை முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா். திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
முதல்வா் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதல்படி, திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை சாா்பிலான உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தை மூன்றாவது கட்டமாக தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடத்தினோம். தமிழ்நாட்டின் அடுத்தகட்ட வளா்ச்சிக்கான இலக்குகளை நோக்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை பற்றி கூட்டத்தில் விரிவாக ஆலோசித்தோம்.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளா்ச்சியை எட்டுவதற்கான திட்டங்கள், சிறப்பு மற்றும் புதுமையான திட்டங்களை பல்வேறு அரசுத்
துறைகளின் மூலம் ஒருங்கிணைந்து செயல்படுத்துகின்ற வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. மேலும், எதிா்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள முயற்சிகள் பற்றியும் ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளாா். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வரின் செயலா் பிரதீப் யாதவ் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...