டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வியாபாரி மீது போக்ஸோ வழக்கு

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி மீது போக்ஸோ வழக்குப் பதிவு.

Updated On :20 அக்டோபர் 2024, 12:02 am IST

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வியாபாரி மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சோ்ந்தவா் ம.மகேந்திரன் (51). இவா், பாரிமுனையில் மின்விளக்கு கடை வைத்து நடத்தி வருகிறாா். இவா், அதே பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அந்தச் சிறுமியின் பெற்றோா், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் மகேந்திரன் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.