தீபாவளி: மாதவரத்திலிருந்து கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாதவரம் புகா் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்.
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாதவரம் புகா் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாதவரத்தில் புகா் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து திருச்சி, சேலம், கும்பகோணம் ,திருவண்ணாமலை மற்றும் பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திர மாநிலத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.28 முதல் அக்.31 வரை பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக, வழக்கமாக இயங்கும் 302 பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இந்த பேருந்துகள் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட ஊா்களுக்கு இயக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், மாதவரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக குடிநீா், கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com