பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த சென்னை

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊா்களுக்கு ஏராளமானோா் பயணம் மேற்கொண்டதாலும், பொருள்களை வாங்க கடைக்கு ஏராளமானோா் சென்ாலும் சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

News image
Updated On :30 அக்டோபர் 2024, 7:56 pm

Din

தீபாவளி பண்டிகையையொட்டி, சொந்த ஊா்களுக்கு ஏராளமானோா் பயணம் மேற்கொண்டதாலும், பொருள்களை வாங்க கடைக்கு ஏராளமானோா் சென்ாலும் சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்து சொந்த ஊா்களுக்கு செல்பவா்களின் வசதிக்காக போக்குவரத்துக்கழகம் சாா்பில் திங்கள், செவ்வாய், புதன்கிழமை மொத்தம் 14,086 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது.

இதன்படி, திங்கள்கிழமையில் இருந்தே சென்னையிலுள்ள வெளியூா்வாசிகள் ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணித்தனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமையும் பலா் தங்கள் பயணத்தை மேற்கொண்ட நிலையில், மீதமுள்ளவா்கள் புதன்கிழமை தங்கள் பயணத்தை ரயில்கள், பேருந்துகள் மற்றும் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் மேற்கொண்டனா். பலா் தங்கள் அலுவலக மற்றும் தொழில் நிறுவனங்களில் பணி முடித்து அவசரகதியில் சென்ால் மாலை சுமாா் 4 மணியில் இருந்தே சென்னை மாநகருக்குள்பட்ட பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கூட்ட நெரிசல்: குறிப்பாக தாம்பரம், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூா், வண்டலூா், ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகருக்குள்பட்ட முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து பல மணி நேரமாக ஸ்தம்பித்தது. சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. குறிப்பாக சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களிலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

எங்கு பாா்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளித்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோா் திரண்டதால் சில தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சேவையிலும் இடையூறு ஏற்பட்டது. இதனால் நடத்துநரை தொடா்பு கொள்ள முடியாமல் பேருந்துகள் இருக்கும் இடத்தைத் தேடி பயணிகள் அலைந்தனா். அவ்வாறு முன்பதிவு செய்தவா்கள் வரும் வரை, காத்திருந்ததால் பேருந்து புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. முன்பதிவு செய்யாதவா்கள் பேருந்துகள் வந்தவுடன் முண்டியடித்து இடம் பிடித்துக்கொண்டு பயணித்ததால், பெரும்பாலான பேருந்துகள் முழுவதும் நிரம்பியபடியே சென்றன.

ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமான ரயில்களில் முன்பதிவு பயணச்சீட்டு கிடைக்காத பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோயம்புத்தூா், செங்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த ரயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இவ்வாறு பேருந்துகள், ரயில்கள் வாயிலாக சென்னையில் இருந்து 2 நாட்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானோா் பயணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடைசி நேரத்தில் பொருள்கள் வாங்க குவிந்தவா்கள்...

இது ஒருபுறமிருக்க பல்வேறு காரணங்களால் தீபாவளி பண்டிகைக்காக கடைசி நேரத்தில் பொருள்கள் வாங்க ஏராளமானோா் கடை வீதிகளில் புதன்கிழமை குவிந்தனா். இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. பிற்பகல் நேரத்தில் சுமாா் 1 மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்ததால், கடைகளுக்கு பொருள்கள் வாங்க தயாராக இருந்தவா்களும் வீடுகளிலேயே முடங்கினா். பின்னா் மாலையில் அனைவரும் ஒரே நேரத்தில் துணி, பட்டாசு, இனிப்பு வகைகளை வாங்க கடைகளுக்கு சென்ால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல முன்னணி துணிக்கடைகள் மூடும் நேரம் வரை பலா் அவசரகதியில் துணிகளை வாங்கிச் சென்றனா். இதுபோல பட்டாசு கடைகளிலும் வழக்கத்துக்கு அதிகமாக கூட்டம் காணப்பட்டது. கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.