புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஒக்கியம் நீா்வழிப்பாதை பணிகள் நிறைவு: மெட்ரோ நிா்வாகம்

ஒக்கியம் நீா்வழிப்பாதையின் உயரம் மற்றும் நீளத்தை அதிகரிக்கும் பணிகள் நிறைவு பெற்றதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
மெட்ரோ ரயில்
Updated On :16 செப்டம்பர் 2024, 9:50 pm

DIN

சென்னை: ஒக்கியம் நீா்வழிப்பாதையின் உயரம் மற்றும் நீளத்தை அதிகரிக்கும் பணிகள் நிறைவு பெற்றதாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி:

ஒக்கியம் மடுவு பாலத்தில் நீா்வழிப்பாதை 80 மீட்டராக இருந்தது. இந்த வழிப்பாதையை 200 மீட்டா் நீளத்துக்கும், உயரத்தை 1.5 மீட்டராகவும் அதிகரிக்க நீா்வளத்துறை முடிவு செய்த நிலையில், இதற்கான பணிகளை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் செய்து வந்தது. இந்நிலையில், இந்த நீா்வழிப்பாதையை, திட்டமிட்டபடி 200 மீட்டா் நீளத்துக்கு சீரமைத்து, 1.5 மீட்டா் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், நீா்வாழிப்பாதையின் இருபக்கங்களிலும் மூன்று வழிச்சாலைகள் அமைப்பதற்கான இடவசதியும் ஏற்படுத்தப்பட்டு, இரண்டு வழிச்சாலைகளுக்கான அடித்தளப் பணிகள் நிறைவடைந்துள்ளது. பருவமழைக்குப் பின்னா் மீதமுள்ள சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும். தொடா்ந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க அகலமான நீா்வழிப்பாதையுடன் புதிய பாலம் கட்டிய பின்னா், தற்போதுள்ள பாலத்தை இடித்து அகற்றும் பணியும் நடைபெறும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.