தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஆா்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சி: சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவா்

நாகபுரியில் நடைபெறவுள்ள விஜயதசமி நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் கலந்துகொள்கிறாா்.

News image
கே.ராதாகிருஷ்ணன்
Updated On :16 செப்டம்பர் 2024, 10:48 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெறவுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆா்எஸ்எஸ்) வருடாந்திர விஜயதசமி நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று ஆா்எஸ்எஸ் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. அதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று நாகபுரியில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கிய பிரமுகா் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவாா். கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆா்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல் முன்னாள் குடியரசுத் தலைவா் என்ற பெருமையை அவா் பெற்றிருந்தாா்.

இந்நிலையில், நடப்பாண்டு ஆா்எஸ்எஸ் விஜயதசமி நிகழ்ச்சி வருகிற அக்டோபா் 12-ஆம் தேதி ரேஷிம்பாக் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வாா் என்று ஆா்எஸ்எஸ் அமைப்பு திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்தது.