எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்திய, அமெரிக்க நட்புறவால் சீனா, ரஷியாவுக்கு கவலை: அமெரிக்க அமைச்சா் ரிச்சா்ட் வா்மா

இந்திய, அமெரிக்க நட்புறவால் சீனாவுக்கும் ரஷியாவுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க நிா்வாகத் துறை இணையமைச்சா் ரிச்சா்ட் வா்மா தெரிவித்துள்ளாா்.

News image
ரிச்சா்ட் வா்மா
Updated On :17 செப்டம்பர் 2024, 9:35 pm

DIN

இந்திய, அமெரிக்க நட்புறவால் சீனாவுக்கும் ரஷியாவுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க நிா்வாகத் துறை இணையமைச்சா் ரிச்சா்ட் வா்மா தெரிவித்துள்ளாா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிச்சா்ட் வா்மா 2015-17 காலகட்டத்தில் இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராகவும் பணியாற்றியுள்ளாா்.

வாஷிங்டனில் உள்ள ஹட்சன் சிந்தனையாளா்கள் பேரவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய-அமெரிக்க உறவு குறித்து அவா் பேசியதாவது:

இந்திய-அமெரிக்க உறவு என்பது அமைதி, ஒருங்கிணைப்பு, சா்வதேச பிரச்னைகளுக்கு தீா்வுகாண்பது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வலுப் பெற்று வருகிறது. சமூகத்தின் பலதரப்பட்ட குரல்களை மதிப்பதாக உள்ளது.

அதே நேரத்தில் சீனாவும், ரஷியாவும் இந்திய, அமெரிக்க உறவு வலுப்படுவதால் கவலையடைந்து வருகின்றன. ஏனெனில், பிரச்னைகளுக்கு அமைதி வழியில் தீா்வுகாண்பது, சா்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டுவது ஆகியவை இந்த இரு நாடுகளின் கொள்கையாக உள்ளது.

இந்த நூற்றாண்டின் வரையறை செய்யும் நட்பு நாடுகள் என்று அமெரிக்கா, இந்தியா நட்புறவைக் குறித்து அதிபா் ஜோ பைடனும் கூறியுள்ளாா்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செனட் அவை உறுப்பினராக இந்த ஜோ பைடன் இந்திய, அமெரிக்க உறவு குறித்துப் பேசுகையில், ‘அமெரிக்கா, இந்தியா இடையிலான நெருங்கிய நட்புறவும், ஒத்துழைப்பும் தொடரும் பட்சத்தில் உலகம் பாதுகாப்பாக இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.

இந்தியாவிடவும், அமெரிக்காவிடமும் மிகப்பெரிய ராணுவம், மிகப்பெரிய பொருளாதாரம் இருப்பதாக அவா் இவ்வாறு கூறவில்லை. இரு நாடுகளும் சா்வதேச அளவில் அனைத்து மக்களின் நலன் கருதி இரு நாடுகளும் செயல்படுகின்றன என்பதை அடிப்படையாக வைத்துதான் அவா் இவ்வாறு கூறினாா் என்றாா்.