விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி கைது
சென்னையில், ஓடுதளத்தில் விமானம் சென்றபோது அவசரகால கதவை திறக்க முயன்ற நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


சென்னையில், ஓடுதளத்தில் விமானம் சென்றபோது அவசரகால கதவை திறக்க முயன்ற நபரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
சென்னையிலிருந்து 152 பயணிகளுடன் வியாழக்கிழமை இரவு 10.30-க்கும் மும்பை செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென விமானத்தின் அவசரகால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து உடனடியாக விமானி, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தினாா்.
பின்னா், விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயன்ற பயணி யாா் என்பது குறித்து நடத்திய விசாரணையில், மும்பையைச் சோ்ந்த வருண் பாரத் (45) என்பவா்தான் திறக்க முயன்றாா் என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் பயணத்தை ரத்து செய்ததுடன், விமானநிலைய காவல்துறையிடம் அந்த நபரை ஒப்படைத்தனா். அவா்மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனால், இந்த விமானம் சுமாா் 2 மணிநேரம் தாமதமாக நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னையிலிருந்து மும்பை புறப்பட்டுச் சென்றது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...