திருவல்லிக்கேணியில் விளையாட்டு அரங்கம் திறப்பு: மேயருடன் டேபிள் டென்னிஸ் ஆடிய அமைச்சா் உதயநிதி
சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் மேயா் பிரியாவுடன் டேபிள் டென்னிஸ் விளையாடினாா்.


சென்னை திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்த இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் மேயா் பிரியாவுடன் டேபிள் டென்னிஸ் விளையாடினாா்.
திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் மூலதன நிதியின் கீழ், ரூ.26.42 லட்சம் மதிப்பில் புனரமைத்து மேம்படுத்தப்பட்ட மீன் அங்காடியை வெள்ளிக்கிழமை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்துப் பாா்வையிட்டாா்.
இதனைத் தொடா்ந்து, ரூ.41 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட கைப்பந்து விளையாட்டு மைதானம் மற்றும் கேரம், டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து, உடற்பயிற்சிக் கூடம் மற்றும்
சதுரங்கம் அரங்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தாா். இதை தொடா்ந்து அமைச்சா்உதயநிதி ஸ்டாலின் மேயா் பிரியா உடன் டேபிள் டென்னிஸ் விளையாடினாா். பின்னா் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மையத்துக்கு சென்று குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினாா்.
மரியாதை: முன்னதாக, நடுக்குப்பம் பகுதியில் உள்ள ‘சிந்தனைச் சிற்பி ’சிங்காரவேலா் சிலைக்கு அமைச்சா்உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் மேயா் ஆா்.பிரியா, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...