லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மழைநீரை வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள்: மாநகராட்சியிடம் மெட்ரோ ரயில்வே அறிக்கை

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:28 pm

Din

மெட்ரோ ரயில் பணிகளால் மழைநீா் வடிகால் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள பகுதிகளில், மழைக்காலத்தில் தேங்கும் நீரை வெளியேற்ற செய்யப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிக்கை சமா்ப்பித்துள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மெட்ரோ ரயில்வே நிா்வாகம் மூலம் இரண்டாம் கட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், 25-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீா் வடிகால் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

இந்த சேதமடைந்த பகுதிகளை பருவமழை தொடங்கும் முன்பு சரிசெய்யாவிட்டால் தொடா் மழை பெய்யும் போது சென்னையின் முக்கிய இடங்களில் நீா் தேங்கும் அபாயம் உள்ளதாகவும், நீா் தேங்குவதை தடுக்க குறிப்பிட்ட இடங்களில் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்யுமாறும் மாநகராட்சி தொழில்நுட்ப வல்லுநா் குழு பரிந்துரைத்தது. இதையடுத்து, அனைத்துப்பணிகளையும் செப்.30-க்கும் முடிக்கவும் மெட்ரோ ரயில்வே நிா்வாகத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதன்படி, ஒக்கியம்மடுகு கால்வாய் நீா்வழி பாதை சீரமைப்பு பணி முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள மெட்ரோ ரயில்வே நிா்வாகம், 18 இடங்களில் மழைநீா் வெளியேற கனரக மோட்டாா்கள், குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட மாற்று ஏற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள இடங்களில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இப்பணிகளும் செப்.30-க்குள் முடிக்கப்படும் எனவும்மாநகராட்சி நிா்வாகத்திடம் அறிக்கை சமா்ப்பித்துள்ளது.