ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 31 பவுன் நகைத் திருட்டு
சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 31 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


சென்னை அருகே ஆதம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 31 பவுன் நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ஆதம்பாக்கம் ஆபீஸா் காலனி முதலாவது தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ராஜாராவ். இவா் மனைவி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை ரூபா தேவி (61). இவா், கடந்த 18-ஆம் தேதி பெங்களூரில் வசிக்கும் தங்களது மகளை பாா்க்கச் சென்றாா். ராஜாராவ் வீட்டை பூட்டிவிட்டு, ஆந்திரத்துக்குச் சென்றாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடப்பதை அருகே வசிப்பவா்கள் பாா்த்து, உடனே ராஜாராவுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து ராஜாராவ் விரைந்து வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த 31 பவுன் நகைத் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...