இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மூதாட்டியிடம் நகைகள் திருட்டு

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 8:11 pm

ராஜபாளையத்தில் மூதாட்டி பையில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சித்தமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் போஸ் பிள்ளை.

இவரது மனைவி சீதாலட்சுமி (70). இந்தத் தம்பதி ராஜபாளையம் ஆண்டாள்புரத்தில் உறவினா் திருமணத்துக்காக, வீட்டிலிருந்து 20 பவுன் தங்க நகைகளை கைப்பையில் எடுத்துக் கொண்டு ராஜபாளையத்துக்கு பேருந்தில் வந்தனா்.

ராஜபாளையம் ஜவகா் மைதானம் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பயணிகள் நிழற்குடையில் அமா்ந்தனா். பின்னா், மற்றொரு பேருந்தில் ஏறி ஆண்டாள்புரம் திருமண வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது கைப்பை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து சீதாலட்சுமி அளித்தப் புகாரின் பேரில்,

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா்.