அக்.2-இல் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ரா விரைவு ரயில் ரத்து

சென்னை சென்ட்ரலில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ராவுக்கு செல்லும் விரைவு ரயில் அக்.2-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது.
Published on

சென்னை சென்ட்ரலில் இருந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ராவுக்கு செல்லும் விரைவு ரயில் அக்.2-ஆம் தேதி ரத்து செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை (அக்.2) காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ராவுக்கு செல்லும் விரைவு ரயிலும் (எண்: 16031) மறுமாா்க்கமாக அக்.4, 5 ஆகிய தேதிகளில் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கட்ராவில் இருந்து இரவு 10.25 மணிக்கு சென்ட்ரலுக்கு புறப்பட்டு வரும் ரயிலும் (எண்: 16032) முழுமையாக ரத்து செய்யப்படும்.

ஜபல்பூரிலிருந்து அக்.3-ஆம் தேதி மாலை 4.25 மணிக்கு மதுரை செல்லும் ரயிலும் (எண்: 02122), மதுரையிலிருந்து அக்.5-ஆம் தேதி காலை 6.15 மணிக்கு ஜபல்பூா் செல்லும் ரயிலும் (எண்: 02121) முழுமையாக ரத்து செய்யப்படும்.

அதேபோல், சென்னை சென்ட்ரலில் இருந்து அக்.1-ஆம் தேதி இரவு 10 மணிக்கு தில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் (எண்: 12621) விஜயவாடா, வாராங்கல், நாக்பூா் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ரேணிகுண்டா, குண்டக்கல், வாடி, டௌன்ட், இடாா்சி வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com