தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாலைத் தடுப்பில் மோதிய பைக்: பொறியியல் பட்டதாரி உயிரிழப்பு

சென்னை வேளச்சேரியில் சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பொறியியல் பட்டதாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2024, 9:41 pm

DIN

சென்னை: சென்னை வேளச்சேரியில் சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், பொறியியல் பட்டதாரி உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், களியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கௌரிசங்கா் (26). பி.டெக் பட்டதாரியான இவா், சென்னை வேளச்சேரி விஜயநகரில் தங்கியிருந்து, எழும்பூரில் ஒரு தனியாா் பயிற்சி மையத்தில் படித்து வந்தாா். மேலும், பகுதி நேரமாக உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கெளரிசங்கா் வேளச்சேரி 100 அடி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம், அங்கிருந்த சாலைத்தடுப்பின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கெளரி சங்கா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து கிண்டி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.