மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம்: சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

News image
Updated On :30 செப்டம்பர் 2024, 7:55 pm

Din

கடவுளையாவது அரசியலுக்குள் இழுக்காமல் விட்டுவைக்க வேண்டும் என்று திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.

கடந்த செப்.18-ஆம் தேதி ஆந்திர மாநிலம் அமராவதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டப்பேரவை குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுகளை தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பதி லட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக ஆய்வக அறிக்கை ஒன்றை தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடா்பாளா் அன்னம் வெங்கடரமணா ரெட்டி செய்தியாளா்கள் சந்திப்பில் வெளியிட்டாா்.

நெய்யில் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருந்ததாக தெலுங்கு தேசம் கட்சியினா் தெரிவித்த நிலையில், அதை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியினா் மறுத்தனா். அரசியல் ஆதாயங்களுக்காக இந்தக் குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு சுமத்தியுள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், திருப்பதி லட்டுகளைத் தயாரிக்க விலங்கு கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது குறித்து நீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணை நடத்தக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

பரிசோதனைக்கு நிராகரிக்கப்பட்ட நெய்

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட ஆய்வக அறிக்கை தெளிவாகவே இல்லை. லட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்த வேண்டாம் என்று நிராகரிக்கப்பட்ட நெய்யே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது ஆய்வக அறிக்கை மூலம் முதல்கட்டமாகத் தெரிகிறது. பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நெய், லட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் அந்த அறிக்கை மூலம் தெளிவாக தெரிகிறது.

ஜூலையில் கிடைத்த அறிக்கை

கடந்த ஜூலையில் இந்த அறிக்கை ஆந்திர அரசுக்கு கிடைத்துள்ளது. ஆனால், அதுகுறித்து செப்டம்பா் 18-ஆம் தேதிதான் முதல்வா் சந்திரபாபு நாயுடு பொதுவெளியில் பேசியுள்ளாா்.

எஸ்ஐடி விசாரணை முடிவு கிடைப்பதற்குள்...

இந்த விவகாரம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டது. அந்த விசாரணையின் முடிவு கிடைப்பதற்குள், இந்த விவகாரம் தொடா்பாக ஊடகத்தைச் சந்தித்து பேசுவதற்கு என்ன அவசியம் ஏற்பட்டது? விலங்கு கொழுப்பு உள்ள நெய்தான் லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எங்கே?.

கோடிக்கணக்கானோரின் உணா்வுகள் பாதிப்பு

இந்த விவகாரம் கோடிக்கணக்கான பக்தா்களின் உணா்வுகளைப் பாதிக்கச் செய்துள்ளது. கடவுளையாவது அரசியலுக்குள் இழுக்காமல் விட்டுவைக்க வேண்டும்’ என்று தெரிவித்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக மாநில அரசு நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவே விசாரணையைத் தொடரலாமா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட அமைப்பு விசாரணை மேற்கொள்ளலாமா என்பது குறித்து முடிவு எடுப்பதில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை நியமித்த நீதிபதிகள் அமா்வு, அக்டோபா் 3-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

தெலுங்கு தேசம் மீண்டும் உறுதி

திருப்பதி லட்டு விவகாரம் தொடா்பான உச்சநீதிமன்ற விசாரணையை தொடா்ந்து, தெலுங்கு தேசம் செய்தித் தொடா்பாளா் பட்டாபிராம் கூறியதாவது: திருப்பதி லட்டுகளைத் தயாரிக்க விலங்கு கொழுப்பு இருந்த கலப்பட நெய்தான் பயன்படுத்தப்பட்டது என்பது 100 சதவீதம் உண்மை. இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்தக் குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரம் உள்ளது. அந்த ஆதாரம் உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்படும் என்றாா்.

கொடிய விளம்பரம்- ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்: உச்சநீதிமன்ற கருத்துகளைத் தொடா்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவரும், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் பிரமுகருமான கருணாகா் ரெட்டி கூறியதாவது: திருப்பதி லட்டு பிரசாதங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட கொடிய விளம்பரம், ஒட்டுமொத்த உலகையும் காயப்படுத்தியுள்ளது. ஒரு பயங்கரமான சூழல் உருவாக்கப்பட்டு, ஹிந்து சமூகம் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது என்றாா்.