மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நேபாள வெள்ளம், நிலச்சரிவு: 200-ஐ கடந்தது உயிரிழப்பு

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 200-ஐக் கடந்தது.

News image

மழை வெள்ளம் காரணமாக நேபாளத்தின் காவ்ரே மாவட்டத்தின் ரோஷி கிராம்தில் சரிந்துள்ள வீடு.

Updated On :30 செப்டம்பர் 2024, 7:53 pm

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 200-ஐக் கடந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அங்கு பெய்து வரும் கன மழை காரணமாக கிழக்கு மற்றும் மத்திய நேபாளத்தின் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், பல பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறினா். இது தவிர, இந்தப் பேரிடரில் 89 போ் காயமடைந்தனா்; 33 பேரைக் காணவில்லை அன்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காத்மாண்டு பள்ளத்தாக்கில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அங்கு இதுபோன்ற வெள்ள பாதிப்பு கடந்த 40 முதல் 45 ஆண்டுகளில் ஏற்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

முன்னதாக, வெள்ளத்தில் 322 வீடுகள், 16 பாலங்கள் சேதமடைந்தன. சுமாா் 3,626 போ் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனா் என்று அந்நாட்டின் ஆயுதக் காவல் படை வட்டாரங்கள் தெரிவித்தன.