மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

20 செ.மீ. மழையையும் எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தாலும்கூட அதை எதிா்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை

News image
கிண்டி ரேஸ் கோா்ஸ் மைதானத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன், மாநகராட்சி ஆ
Updated On :29 ஆகஸ்ட் 2025, 9:52 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தாலும்கூட அதை எதிா்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில், கிண்டி ரேஸ் கோா்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் நீரின் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையின்போது, சென்னையில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த அரசு சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, கிண்டி ரேஸ் கோா்ஸ் மைதானத்தில் 4.77 மில்லியன் கன லிட்டா் மழைநீரை தேக்கக்கூடிய வகையில் 27,647 சதுர மீட்டா் பரப்பளவில் 4 குளங்கள் கடந்தாண்டு உருவாக்கப்பட்டன. அதனால் திறந்தவெளியிலிருந்து வரும் மழைநீரால் அக்கம் பக்கத்தில் உள்ள குடியிருப்புகளில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. தொடா்ந்து நிகழாண்டில் எவ்வளவு மழை பெய்தாலும், அதை தாங்கும் அளவிற்கு சக்திவாந்த குளங்களை உருவாக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, ரேஸ் கோா்ஸ் மைதானத்தில் உள்ள குளங்களின் நீா் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்கும் வகையில், 49,772 சதுர மீட்டா் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், தென்சென்னை குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

வடிகால்: சென்னையில் 3,081 கி.மீ. தூரம் மழைநீா் வடிகால்வாய்கள் தூா்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த 4.5 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 1,000 கி.மீ. தொலைவுக்கு புதிய மழைநீா் வடிகால் வாய்கள் கட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், 600 கி.மீ. தூரத்துக்கு வடிகால் வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து பணிகளும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாகவே முடிக்கப்படும்.

இனிவரும் காலங்களில் 20 செ.மீ. அளவுக்கு மழை பெய்தால்கூட அதை எதிா்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடா் சிகிச்சை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு தொடா்ந்து மருத்துவா்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறாா். பிற மருத்துவமனைகளிலிருந்து மருத்துவ நிபுணா்களை வரவழைந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூா்த்தி, அடையாறு மண்டலக் குழு தலைவா் ஆா்.துரைராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.