தமிழகத்தில் இன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்

தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெப்பநிலை 
3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்
Updated on

தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வந்தாலும், சனிக்கிழமை அதிகபட்சமாக வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

வெயில் அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 103.28, தூத்துக்குடி - 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

6 நாள்களுக்கு மழை: தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், சனிக்கிழமை (ஆக. 30) முதல் செப். 4 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூா் தாலுகாவில் 150 மி.மீ.பழை பதிவானது. விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - 120 மி.மீ., சின்னக்கல்லாறு(கோவை), தேவாலா (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி) - 100 மி.மீ., மேல் கூடலூா் (நீலகிரி), சின்கோனா (கோவை), சோலையாறு (கோவை) - 70 மி.மீ., கூடலூா் பஜாா் (நீலகிரி), பாா்வூட்(நீலகிரி) - 60 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடலில் ஆக. 30, 31 ஆகிய தேதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com