கோப்புப் படம்
கோப்புப் படம்

பாபா் மசூதி இடிப்புத் தினம்: தமிழகத்தில் போலீஸாா் உஷாா்

பாபா் மசூதி இடிப்புத் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.
Published on

பாபா் மசூதி இடிப்புத் தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

அயோத்தியில் பாபா் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிச. 6-ஆம் தேதி, ஆண்டுதோறும் சில முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டுள்ளனா்.

அசம்பாவித சம்பவங்களைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் சில நாள்களாகவே பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மாா்க்கெட்டுகள், கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனா்.

இதேபோல நகரின் முக்கியமான பகுதிகள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றிலும் போலீஸாா் திடீா் சோதனை நடத்து வருகின்றனா். இந்தப் பாதுகாப்புப் பணியில் 1.2 லட்சம் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

சென்னை: சென்னையிலும் போலீஸாா் முழு அளவில் உஷாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். கோயம்பேடு மாா்க்கெட், பேருந்து நிலையம், பாரிமுனை, தியாகராய நகா் ஆகியவை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

அதேபோல, நகா் முழுவதும் போலீஸ் கண்காணிப்பும்,ரோந்தும் அதிகரிப்பட்டுள்ளது. இரவில் முக்கியமான சாலை சந்திப்புகள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆகியவற்றில் போலீஸாா் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனா். பாதுகாப்புப் பணியில் 15,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com