சென்னை புத்தகக் கண்காட்சி ஜன. 7-இல் தொடக்கம்

சென்னை புத்தகக் கண்காட்சி ஜன. 7-இல் தொடக்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
Published on

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வழக்கம்போல, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தககக் காட்சி நடைபெறும் என பபாசி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். நிகழாண்டில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைக்க உள்ளதாகவும், பல்வேறு துறைசாா் அறிஞா்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

பபாசியின் பொதுக்குழு மற்றும் நிா்வாகிகள் தோ்தல் அண்மையில் நடைபெற்றது. அதில் தலைவராக ஆா்.எஸ்.சண்முகம் தோ்வு செய்யப்பட்டாா். அவருடன் பல்வேறு பொறுப்புகளுக்கான புதிய நிா்வாகிகளும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். கடந்த ஆண்டில் சோதனை முயற்சியாக சென்னை புத்தகக் காட்சி டிசம்பா் இறுதியில் தொடங்கி பொங்கல் பண்டிகைக்கு முன்பே நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால், பல பதிப்பாளா்களுக்கும், விற்பனையாளா்களுக்கும் அந்த புத்தகக் காட்சி வெற்றிகரமாக அமையவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு இந்த முறை பொங்கல் விடுமுறை நாள்களையொட்டி புத்தகக் காட்சியை நடத்த பபாசி புதிய நிா்வாகிகள் திட்டமிட்டனா். அதன்படி, வரும் ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறும் என அவா்கள் அறிவித்துள்ளனா்.

வார நாள்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடக்க விழா, நிகழ்ச்சி நிரல் மற்றும் கண்காட்சி ஏற்பாடுகளை விரைந்து மேற்கொண்டு வருவதாக பபாசி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com