தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருவது தொடர்பாக....

News image

சென்னையில் பரவலாக மழை

Updated On :16 டிசம்பர் 2025, 6:18 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று(டிச. 16) காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.16) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், எழும்பூர், பாரிமுனை, மயிலாப்பூர், அயனாவரம், வில்லிவாக்கம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

மேலும் வடசென்னை பகுதிகளான வியசார்பாடி, வள்ளளார் நகர், திருவொற்றியூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Summary

Heavy rains have been lashing Chennai and its suburban areas since this morning (December 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.