கிறிஸ்துமஸ்: 891 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
கிறிஸ்துமஸ்: 891 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Updated on

கிறிஸ்துமஸ் பண்டிகையை (டிச.25) முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (டிச.23) 255 பேருந்துகளும், புதன்கிழமை (டிச.24) 525 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதேபோல், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செவ்வாய் மற்றும் புதன்கிழமை ஆகிய தேதிகளில் மொத்தம் 91 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மொத்தம் 20 பேருந்துகளும் என மொத்தம் 891 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதையடுத்து விடுமுறை முடிந்து சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை (டிச.28) சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com