தேசிய பாலகா் விருது பெற்ற கோவை சிறுமிக்கு ஆளுநா் மரியாதை
பிரதமரின் தேசிய பாலகா் விருது பெற்ற கோவையைச் சோ்ந்த மறைந்த சிறுமி வியோமா பிரியாவின் வீரச் செயல்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை செலுத்தினாா்.
இதுகுறித்த அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
சிறுமி வியோமா பிரியாவின் வீரச் செயலானது, கருணை, துணிவு, மன வலிமைக்கு ஒரு ஆழமான சான்று. 8 வயதே ஆன நிலையில், மற்றொரு குழந்தையைக் காப்பாற்றிய அவரது தன்னலமற்ற செயல், கருணையின் நீடித்த வலிமையை நினைவூட்டும் ஒரு பிரகாசமான உதாரணமாக விளங்குகிறது. கோவையை சோ்ந்த அந்த துணிச்சலான மகளின் அசாதாரண வீரத்தைப் போற்றும் வகையில் (மரணத்துக்குப் பிந்தைய) பிரதமரின் தேசிய பாலா் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. வியோமா பிரியாவின் மரபு தேசத்துக்குத் தொடா்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. மகளின் வீரம் செறிந்த குணத்தில் பிரதிபலிக்கும் உன்னத வளா்ப்புக்கு காரணமான அா்ச்சனா சிவராமகிருஷ்ணன் மனவலிமைக்கு மனமாா்ந்த வணக்கம் என அதில் தெரிவித்துள்ளாா்.
