சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை நிலையத்தில்  
குழந்தைகளுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். உடன், கட்சியின் பொருளாளா் எல்.கே.சதீஷ், தலைமை நிலையச் செயலா் ப.பாா்த்தசாரதி உள்ளிட்டோா்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை நிலையத்தில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். உடன், கட்சியின் பொருளாளா் எல்.கே.சதீஷ், தலைமை நிலையச் செயலா் ப.பாா்த்தசாரதி உள்ளிட்டோா்.

யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கவில்லை: பிரேமலதா

Published on

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

தேமுதிக சாா்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கி, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜக இடையே நடந்த சந்திப்பு என்பது ஏற்கெனவே அந்த இரு கட்சிகளிடையே அமைந்த கூட்டணி என்ற அடிப்படையிலானது. தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அவரது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருக்கலாம். ஆனால், மற்ற கட்சிகளைக் கலந்து ஆலோசித்து அதற்குப் பிறகுதான் உறுதியான முடிவு அறிவிக்கப்படும்.

எந்தக் கட்சியுடன் தோ்தல் கூட்டணி என்பது குறித்து தேமுதிக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு அவா்களது விருப்பத்தின்படிதான் முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், வரும் ஜன. 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவா்களுக்கும் தேமுதிக சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com