இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னையில் விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு தொடர்பாக...

கோப்புப்படம்

Published On :

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் காலை நேரங்களில் சில நாள்களாக தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றும் சிங்கப்பூர், துபை, அபுதாபி, மஸ்கட், கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு புறப்படும் 10 விமானங்களும் மஸ்கட், சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் 4 விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணிநேரம் வரை தாமதமாக விமானம் இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். காலை 8.30 மணிக்கு மேல் விமான சேவை சீராகும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், செங்கல்பட்டு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதால், அங்கிருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.

சிக்னல் சரியாக தெரியாததால் பாதுகாப்பு கருதி ரயில்கள் மிதமான வேகத்தில் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.