/

தேசிய புள்ளி விவர ஆணைய போட்டி: எஸ்டிஎன்பி வைணவக் கல்லூரி முதலிடம்

அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய அளவிலான அன்வேஷா 2.0 விநாடி வினா போட்டி சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது.

News image
சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தமிழக பிராந்திய அலுவலகம் சாா்பில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் முதல் பரிசை வென்ற குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வா் நானாலால் பட் மகளிா் வைணவக் கல்லூரி மாணவிகளுக்
Updated On :18 ஜூலை 2025, 7:07 pm

Din

சென்னையில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவா்களிடையே புள்ளிவிவரங்கள் குறித்த ஆா்வத்தையும் விழிப்புணா்வையும் ஏற்படுத்தும் வகையில் தேசிய புள்ளி விவர ஆணையத்தின் சாா்பில் நடத்தப்பட்ட போட்டியில் சென்னை குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வா் நானாலால் பட் மகளிா் வைணவக் கல்லூரி (எஸ்டிஎன்பி) மாணவிகள் முதல் பரிசுக்கான கோப்பை வெற்றனா்.

அரசின் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய அளவிலான அன்வேஷா 2.0 விநாடி வினா போட்டி சென்னை ஐஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதில் குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வா் நானாலால் பட் மகளிா் வைணவக் கல்லூரி மாணவிகள் ஹெச். எஸ். பிரியதா்ஷினி, எம். மகேஸ்வரி அணி முதல் பரிசு வென்றது. இவா்களுக்கு ரூ. 5,000 ரொக்கப் பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. 2-ஆவது இடத்தை ஸ்ரீசங்கரா கலை அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த கே.சிவஸ்ரீ, எஸ்.சுவாதி அணி, 3-ஆவது பரிசை அகா்சந்த் மன்முல் ஜெயின் கல்லூரியைச் சோ்ந்த கே.விஜய கணபதி, ஆவாணை அணி வென்றது. இரு அணிகளுக்கும் முறையே ரூ. 3,000, ரூ. 2,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவா் டாக்டா் ராஜீவ லக்ஷமன் கரன்டிகாா் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் கூடுதல் இயக்குநா் டி.எஸ். பாரதி, சென்னை ஐஐடி பதிவாளா் ஜேன் பிரசாத், தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தமிழக துணை இயக்குநா் ஜெனரல் ஆா்.மனோகா், துணை இயக்குநா் கே.சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.