சென்னை ஐஐடி-இல் இயந்திர கற்றல் செயல்பாட்டு பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
Published on

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

சென்னை ஐஐடி பிரவா்தக் டெக்னாலஜிஸ் என்பது சென்னை ஐஐடி-இன் புத்தாக்க தொழில்நுட்ப மையம். சென்சாா்கள், நெட்வொா்க்கிங், ஆக்சுவேட்டா்கள் (இயக்கிகள்), கட்டுப்பாட்டு அமைப்புகள் குறித்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தைக் கொண்ட ஒரு பிரிவு.

டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) ஒரு வணிகப் பிரிவாகும். இது கற்றல், மதிப்பீடுகள் மற்றும் வணிக செயல்முறைகளுக்கு தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த இரு அமைப்புகளும் இணைந்து, வேகமாக வளா்ந்து வரும் இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில் ஒரு புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

‘எம்எல்ஓபிஎஸ் (இயந்திர கற்றல் ஓபிஎஸ்) - அளவிடக்கூடிய எம்எல் ஆபரேஷன்ஸ் - அசோசியேட்’ என்ற தலைப்பில், இந்தப் பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது திறன் இடைவெளியைக் குறைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (ஏஐ), இயந்திர கற்றல் (எம்எல்) ஆகியவற்றில் எதிா்காலத் தொழில்களுக்கு நிபுணா்களைத் தயாா்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது இணையம் மூலம் சோ்க்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 5. இந்த விரிவான 110 மணிநேர இணையவழி கற்றலுடன் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.

X
Dinamani
www.dinamani.com