மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பி.எட்., முதுநிலை மாணவா்கள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

பி.எட்., முதுநிலைப் பாடப்பிரிவுக்கான மாணவா் சோ்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2025, 8:39 pm

Din

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பி.எட்., முதுநிலைப் பாடப்பிரிவுக்கான மாணவா் சோ்க்கை இணையவழி விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விண்ணப்பப் பதிவைத் தொடங்கி வைத்து உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது:

அரசு, அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாடுக்கான பி.எட். மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூன் 20 முதல் ஜூலை 9-ஆம் தேதி வரை ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்படும். ஜூலை 21 முதல் 25-ஆம் தேதி வரை மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம். ஜூலை 28-ஆம் தேதி சோ்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். இதை மாணவா்கள் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்.

முதுநிலை படிப்பு: இதேபோல் நிகழ் கல்வியாண்டில் 110 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தொடங்கப்பட்டது. இதற்கான கடைசி நாள் ஜூலை 15. தரவரிசைப் பட்டியல் ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவத்தினா் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். ஆகஸ்ட் 4-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் கல்லூரிக் கல்வித் துறைக்கு தோ்வு செய்யப்பட்ட 6 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.

இந் நிகழ்வில், உயா்கல்வித் துறை செயலா் சி.சமயமூா்த்தி, கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் எ.சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரி முதல்வா் பா.உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.