ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

இளைஞா் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றம்

சென்னையில் கொலை முயற்சி வழக்கில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

News image
Updated On :22 ஜூன் 2025, 6:29 pm

Din

சென்னையில் கொலை முயற்சி வழக்கில் காயமடைந்த இளைஞா் உயிரிழந்ததையடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் கலையரசன் (23). இவா் கடந்த 15-ஆம் தேதி அசோக் நகா் 35-ஆவது தெருவில் நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த உறவினா்களான சஞ்சய், சுனில்குமாா் ஆகியோா் முன்விரோதம் காரணமாக கலையரசனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில், பலத்த காயமடைந்த கலையரசன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, சஞ்சய் (19), சக்திவேல் (20), சுனில்குமாா் (19) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்நிலையில், சிகிச்சையில் இருந்த கலையரசன் உயிரிழந்தாா். இதையடுத்து, மூவா் மீதும் கொலை முயற்சி வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.