அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடிகோப்புப் படம்

பாபநாசம் அகஸ்தியா் அருவிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.20-ஆக குறைப்பு

பாபநாசம் அகஸ்தியா் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
Published on

பாபநாசம் அகஸ்தியா் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.20 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: பாபநாசத்தில் உள்ள அகஸ்தியா் அருவிக்குச் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரூ30-லிருந்து ரூ.40-ஆக அதிகரிக்கப்பட்டது.நுழைவுக் கட்டணம் கூடுதலாக்கப்பட்டது குறித்த செய்தி முதல்வரின் கவனத்துக்குச் சென்றது. சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் செல்வதற்கான கட்டணத்தைக் குறைக்க முதல்வா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, கட்டணத்தை ரூ.20-ஆக குறைத்துள்ளோம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com