ஷாலிமா் - சென்னை ரயிலில் கூடுதல் பொதுப் பெட்டிகள் இணைப்பு
ஷாலிமா் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.


சென்னை, மாா்ச் 21: ஷாலிமா் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளன.
மேற்கு வங்க மாநிலம் ஷாலிமரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு செவ்வாய்க்கிழமைதோறும் விரைவு ரயில் (எண் 22825) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலிலிருந்து ஷாலிமருக்கு புதன்கிழமைதோறும் விரைவு ரயில் (எண் 22826) இயக்கப்படுகிறது. இதில் 9 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 5 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் மற்றும் இரு பொதுப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகிறது.
தற்போது தொலைதூர ரயில்கள் அனைத்தையும் 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஷாலிமா் - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ரயிலில் ஏப். 15-ஆம் தேதி முதல் கூடுதலாக இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...