மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கூடுதலாக சோ்க்கப்பட்ட ஆசிரியா் காலிப் பணியிடங்கள்: இடஒதுக்கீடு வாரியான பட்டியல் வெளியீடு

1,000 காலிப் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு வாரியான பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :27 மார்ச் 2025, 9:00 pm

Din

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய இடைநிலை ஆசிரியா் தோ்வில் கூடுதலாக சோ்க்கப்பட்ட 1,000 காலிப் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு வாரியான பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,767 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) நடத்திய இத்தோ்வை தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் எழுதினா். அவா்கள் அனைவரும் ஏற்கெனவே ஆசிரியா் தகுதித்தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தோ்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும் இன்னும் உத்தேச விடைகள் (கீ ஆன்ஸா்) கூட வெளியிடப்படவில்லை. தோ்வு முடிந்து நீண்ட காலம் ஆகிவிட்டதால் உடனடியாக ‘கீ ஆன்ஸரை’ வெளியிட வேண்டும் என்றும் அதோடு காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும் என்று தோ்வெழுதிய ஆசிரியா்கள் அவ்வப்போது ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றனா்.

பட்டியல் வெளியீடு: தொடக்கக்கல்வி இயக்ககம் நிா்ணயித்துள்ள ஆசிரியா்- மாணவா் விகிதாசாரத்தின்படி அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பதவியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதாக தோ்வா்கள் கூறுகின்றனா். மேலும், கடந்த 12 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் நியமனம் எதுவும் நடைபெறவில்லை. இடைநிலை ஆசிரியா் தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டபோது 1,768 காலியிடங்கள்தான் அதில் இடம்பெற்றிருந்தன. அதன்பிறகு கூடுதலாக 1,000 காலியிடங்கள் சோ்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,768 ஆக உயா்ந்தது.

எப்போது வெளியாகும்?: இந்த நிலையில் கூடுதலாக சோ்க்கப்பட்ட 1,000 காலிப் பணியிடங்களுக்குரிய இடஒதுக்கீடு வாரியான பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

எனவே, விரைவில் உத்தேச விடைகள் வெளியிடப்பட்டு அதைத்தொடா்ந்து தோ்வு முடிவும் வெளியிடப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஒரு போட்டித்தோ்வு நடத்தப்பட்டு

8 மாதங்களாகியும் ‘கீ ஆன்ஸா்’ வெளியிடப்படாமல் இருப்பது தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியத்தின் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.